மாணவ-மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம்


மாணவ-மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 8 May 2023 1:15 AM IST (Updated: 8 May 2023 8:28 PM IST)
t-max-icont-min-icon

சிங்காநல்லூரில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் மாணவ-மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோயம்புத்தூர்

சிங்காநல்லூர்

சிங்காநல்லூரில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் மாணவ-மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தனியார் நர்சிங் கல்லூரி

கோவை சிங்காநல்லூர் வரதராஜபுரம் பகுதியில் ஜே.கே. நர்சிங் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவ-மாணவிகளுக்கு நேற்று தேர்வு நடந்தது. ஆனால் 10 பேரை மட்டும் தேர்வு எழுத அனுமதிக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் அவர்களுக்கு ஆதரவாக சக மாணவ-மாணவிகள் நேற்று காலை தேர்வு எழுத செல்லாமல் திடீரென உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் தரையில் அமர்ந்து கோஷங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தேர்வு எழுத அனுமதி மறுப்பு

இதுகுறித்து மாணவ-மாணவிகள் கூறியதாவது:-

எங்கள் கல்லூரியில் இளங்கலை முதலாம் ஆண்டு நர்சிங் படிப்புக்கு 2022-23-ம் கல்வி ஆண்டில் 50 மாணவ-மாணவிகளுக்கு சேர்க்கை அனுமதி வழங்கப்பட்டது. அனைவருக்கும் கடந்த ஓராண்டாக கல்வி பயிற்றுவிக்கப்பட்டது. கடந்த வாரம் முதலாம் ஆண்டு தேர்வு தொடங்கியபோது, 10 மாணவ-மாணவிகளுக்கு தேர்வு எழுத கல்லூரி நிர்வாகம் அனுமதி மறுத்தது. இதுகுறித்து கேட்டபோது, முதலாம் ஆண்டு சேர்க்கையில் 40 பேருக்கு மட்டுமே பல்கலைக்கழகம் உரிமம் வழங்கி உள்ளது என்று கூறுகின்றனர்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

பேச்சுவாா்த்தை

இதையடுத்து கல்லூரி நிர்வாகம், மாணவ-மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியது. அதில் தேர்வு எழுத அனுமதிக்காத 10 மாணவ-மாணவிகளுக்கும் வருகிற ஜூன் அல்லது செப்டம்பர் மாதத்தில் சிறப்பு தேர்வு நடத்தப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது. இதை ஏற்று மாணவ-மாணவிகள் போராட்டத்தை கைவிட்டனர்.


Related Tags :
Next Story