மாணவ-மாணவிகள் உடனடி தேர்வில் பங்கேற்க நடவடிக்கை
பொதுத்தேர்வு எழுதாத, ேதர்ச்சி அடையாத மாணவ-மாணவிகள் உடனடி தேர்வில் பங்கேற்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முதன்மை கல்வி அதிகாரி ஞானகவுரி கூறினார்.
பொதுத்தேர்வு எழுதாத, ேதர்ச்சி அடையாத மாணவ-மாணவிகள் உடனடி தேர்வில் பங்கேற்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முதன்மை கல்வி அதிகாரி ஞானகவுரி கூறினார்.
பொதுத்தேர்வு
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
விருதுநகர் மாவட்டத்தில் நடந்து முடிந்து முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 1,443 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதாத நிலையிலும், 1,027 பேர் தேர்ச்சி பெறாத நிலையிலும், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 623 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதாத நிலையிலும், 606 மாணவ, மாணவிகள தேர்ச்சி பெறாத நிலையிலும், பிளஸ்-1 வகுப்பில் 1,128 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதாத நிலையில் உள்ளனர்.
இந்த மாணவ-மாணவிகள் அனைவரையும் அவர் படித்த பள்ளிகளில் இதற்கான ஒரு குழு அமைத்து மாணவர்களது இல்லங்களுக்கு சென்று பெற்றோர் மற்றும் அவர்களை நேரில் சந்தித்து தகுந்த ஆலோசனை வழங்கி பள்ளிக்கு வரவழைத்து தகுந்த ஆசிரியர்களை கொண்டு சிறப்பு வகுப்புகள் நடத்தவும் அதற்கான கால அட்டவணையை தயார் செய்யவும் அனைத்து பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உடனடி தேர்வு
மேலும் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் வாய்ப்பை தவறவிட்ட மற்றும் தேர்ச்சி பெறாத மாணவர்களை உடனடித்தேர்வில் பங்கேற்கும் வகையில் இம்மாதம் 22-ந் தேதி முதல் ஜூலை மாதம் 4-ந் தேதி வரை (ஞாயிறு நீங்கலாக) உள்ள நாட்களில் விண்ணப்பிக்க செய்து உடனடி தேர்வில் அனைத்து மாணவர்களும் பங்கேற்பதை உறுதி செய்யவும் அனைத்து பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பிளஸ்-1 வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படும் நிலையில் அதில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கும் இதே நடைமுறையை பின்பற்றி அவர்களுக்கான நாட்களில் விண்ணப்பிக்க செய்து அம்மாணவர்கள் உடனடித்தேர்வில் பங்கேற்பதை தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.