தந்தைக்கு சிறைதண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு அளித்ததால் முண்டியம்பாக்கம் மருத்துவக்கல்லூரி மாணவர் தற்கொலை போலீஸ் விசாரணை


தந்தைக்கு சிறைதண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு அளித்ததால்    முண்டியம்பாக்கம் மருத்துவக்கல்லூரி மாணவர் தற்கொலை    போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 20 Nov 2022 12:15 AM IST (Updated: 20 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

தந்தைக்கு சிறைதண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு அளித்ததால் மனவேதனையடைந்த முண்டியம்பாக்கம் மருத்துவக்கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.

விழுப்புரம்


விக்கிரவாண்டி,

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுகா அம்மன் குளத்து மேட்டை சேர்ந்தவர் அருள். இவரது மகன் நவீன் குமார் (வயது 17). இவர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரியில் கண் மருத்துவத்தில் பி.எஸ்சி. முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

இந்த நிலையில் இவரது தந்தை அருள் மீது பெண் ஒருவரை பலாத்காரம் செய்ததாக கூறி, கடந்த 2006-ம் ஆண்டு பெரியதச்சூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை கோர்ட்டில் நடந்து வந்த நிலையில், அதில் அவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த தீர்ப்பை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் அவர் முறையீடு செய்தார். அதில், கீழ்கோர்ட்டு விதித்த தண்டனையை கடந்த மாதம் உச்சநீதிமன்றம் உறுதிபடுத்தி, தீர்ப்பு வழங்கியது. அதன்பேரில், கடந்த வாரம் அருளை பெரியதச்சூர் போலீசார் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

தற்கொலை

இதனால் மனமுடைந்த நவீன்குமார், வீட்டில் தனியாக இருந்த போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த பெரியதச்சூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவர் நவீன் குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story