10-ம் வகுப்பு மாணவி திடீர் தற்கொலை


10-ம் வகுப்பு மாணவி திடீர் தற்கொலை
x
தினத்தந்தி 19 May 2023 6:45 PM GMT (Updated: 19 May 2023 6:46 PM GMT)

தேர்வு முடிவு வெளியான சில மணி நேரத்தில் 10-ம் வகுப்பு மாணவி திடீரென தற்கொலை செய்துகொண்டார். தேர்ச்சி பெற்றுள்ள அவர், தனக்கு குறைந்த மதிப்பெண்கள் கிடைத்து இருப்பதாக கருதி இந்த விபரீத முடிவை எடுத்தது தெரியவந்தது.

மதுரை

பேரையூர்,

தேர்வு முடிவு வெளியான சில மணி நேரத்தில் 10-ம் வகுப்பு மாணவி திடீரென தற்கொலை செய்துகொண்டார். தேர்ச்சி பெற்றுள்ள அவர், தனக்கு குறைந்த மதிப்பெண்கள் கிடைத்து இருப்பதாக கருதி இந்த விபரீத முடிவை எடுத்தது தெரியவந்தது.

10-ம் வகுப்பு மாணவி

மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள பொன்னையாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் முனியாண்டி. இவருடைய மகள் காளீசுவரி (வயது 16). இவர் பேரையூரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து, பொதுத்தேர்வு எழுதி இருந்தார். தேர்வு முடிவு நேற்று வெளியானது. காளீசுவரி 500-க்கு 323 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருந்தார்.

தான் நன்றாக படித்தும் குறைந்த மதிப்பெண்கள்தான் கிடைத்திருப்பதாக கூறி மாணவி காளீசுவரி மனவருத்தத்தில் இருந்தார். குடும்பத்தினரிடமும் சரியாக பேசவில்லை.

தூக்குப்போட்டு தற்கொலை

சற்று நேரத்தில் திடீரென காளீசுவரி வீட்டில் தூக்கில் தொங்கினார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவருடைய குடும்பத்தினர் மாணவியை மீட்டு பேரையூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், காளீசுவரி ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

மாணவியின் உடலை பார்த்து குடும்பத்தினர், உறவினர்கள் கதறியது சோகத்தை ஏற்படுத்தியது.. இதுகுறித்து அறிந்த பேரையூர் போலீசார் விரைந்து வந்து, காளீசுவரியின் உடலை பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story