தூக்குப்போட்டு பள்ளி மாணவி தற்கொலை


தூக்குப்போட்டு பள்ளி மாணவி தற்கொலை
x

திருச்செங்கோடு அருகே பெற்றோர் படிக்க சொல்லி கண்டித்ததால் 11-ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

நாமக்கல்

திருச்செங்கோடு

11-ம் வகுப்பு மாணவி

திருச்செங்கோடு அருகே மோளிப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் தேவராஜ். கூலித்தொழிலாளி. இவரது மகள் காவியா. இவர் எலச்சிபாளையத்தில் உள்ள தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். இந்தநிலையில் காவியா சரியாக படிக்கவில்லை என்று பெற்றோர் கண்டித்ததாக கூறப்படுகிறது.

இதனால் மாணவி சில நாட்களாக மனவேதனையில் இருந்து வந்ததாக தெரிகிறது. இதையடுத்து மாணவி வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் கதறி அழுதனர். இதுகுறித்து திருச்செங்கோடு ரூரல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

விசாரணை

இதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மாணவி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெற்றோர் படிக்க சொல்லி கண்டித்ததால் 11-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story