கிணற்றில் குதித்து கல்லூரி மாணவர் தற்கொலை
திருச்செங்கோடு அருகே வளாகத்தேர்வில் தேர்வாகாததால் கிணற்றில் குதித்து கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.
திருச்செங்கோடு
கல்லூரி மாணவர்
திருச்செங்கோடு அருகே வரப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயச்சந்திரன் (வயது 23). இவர் பெருந்துறையில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் நான்காம் ஆண்டு பி.இ. படித்து வந்தார். இந்தநிலையில் அவர் படிக்கும் கல்லூரியில் வளாகத்தேர்வு நடந்ததாக கூறப்படுகிறது.
இதில் அவர் தேர்வாகவில்லை என தெரிகிறது. இந்தநிலையில் அவர் மன உளைச்சலில் இருந்துள்ளார். இதையடுத்து ஜெயச்சந்திரன் தனது வீட்டு பகுதியில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். அதை கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக சென்றவர்கள் திருச்செங்கோடு ரூரல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
விசாரணை
இதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஜெயச்சந்ரதின் உடலை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்செங்கோடு அருகே வளாகத்தேர்வில் தேர்வாகாததால் கிணற்றில் குதித்து கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்திஉள்ளது.