தனியார் கல்லூரி விடுதியில் மாணவர் தற்கொலை


தனியார் கல்லூரி விடுதியில் மாணவர் தற்கொலை
x

தனியார் கல்லூரி விடுதியில் கேரள மாணவர் தற்கொலை செய்து கொண்டார். சாவில் சந்கேதம் இருப்பதாக சக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பொள்ளாச்சி,

கேரளா மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர் மனோஜ். இவரது மகன் விஷ்ணு (வயது 19). இவர் பொள்ளாச்சி திப்பம்பட்டியில் உள்ள சரஸ்வதி தியாகராஜா கல்லூரியில் பி.பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

கல்லூரி விடுதியில் தங்கியிருந்து படித்து வந்த மனோஜ் திடீரென நேற்று விடுதி அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பகிறது.

போராட்டம்

இந்த நிலையில் நேற்று சக மாணவர்கள் விஷ்ணுவின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு உண்டானது. இதற்கிடையில் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் விஷ்ணுவுக்கும், திருச்சூரை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் இடையே முகநூல் மூலம் கடந்த 7 மாதங்களுக்கு முன் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்தது தெரியவந்தது.

இந்த நிலையில் நேற்றுமுன்தினம் விஷ்ணு, அந்த பெண்ணுடன் பேசியதாக தெரிகிறது. அப்போது இருவருக்கும் இடையே சண்டை வந்ததாக கூறப்படுகிறது. இதனால் விரக்தி அடைந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story