திருச்சியில் காவிரி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட மாணவர் திருவெறும்பூரில் பிணமாக மீட்பு


திருச்சியில் காவிரி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட மாணவர் திருவெறும்பூரில் பிணமாக மீட்பு
x

திருச்சியில் காவிரி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட மாணவர் திருவெறும்பூரில் பிணமாக மீட்கப்பட்டார்

திருச்சி

திருவெறும்பூர், ஆக.4-

திருச்சி-மதுரை ரோடு ஜீவா நகரை சேர்ந்தவர் சக்திவேல். எலக்ட்ரீசியன். இவரது மகன் முகேஷ் குமார் (வயது 17). இவர் காந்தி மார்க்கெட் பகுதியில் உள்ள சையது முர்துஷா பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலையில் பள்ளி முடிந்ததும் வீட்டுக்கு செல்லாமல் திருச்சி மேலச் சிந்தாமணி பகுதியிலுள்ள காவிரி ஆற்றுக்கு சென்றுள்ளார். பின்னர் அவர் காந்திபடித்துறையில் பள்ளி புத்தகப்பையை வைத்து விட்டு குளிக்க ஆற்றில் இறங்கியதாக தெரிகிறது. அப்போது, ஆற்றில் தண்ணீர் வேகம் அதிகமாக இருந்ததால் மாணவர் முகேஷ்குமார் ஆற்றுக்குள் இழுத்து செல்லப்பட்டார். இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மாணவரை தேடும் பணியில் ஈடுபட்டனர். இரவாகியதால் தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது. நேற்று காலையில் மீண்டும் தேடும் பணி நடைபெற்றது. இந்தநிலையில் முகேஷ் குமாரின் உடல் திருவெறும்பூர் அருகே உள்ள ஒட்டக்குடி பகுதியில் காவிரி ஆற்று கரையில் ஒதுக்கியது. திருவெறும்பூர் போலீசார் பிணத்தை கைப்பற்றி பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story