மாணவர் சங்கத்தினர்-போலீசார் தள்ளுமுள்ளு
மாணவர் சங்கத்தினர்-போலீசார் தள்ளுமுள்ளு
கோயம்புத்தூர்
இந்திய மாணவர் சங்கத்தின் (எஸ்.எப்.ஐ.) கோவை மாவட்ட மாநாடு காந்திபுரம் கமலம்துரைசாமி திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. இதனால் மாநாட்டு பிரதிநிதிகள் காந்திபுரத்தில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு ஊர்வலமாக மாநாட்டு அரங்கை நோக்கி செல்ல முயன்றனர். அதற்கு அனுமதி இல்லை என்று போலீஸ் அதிகாரிகள் கூறினர்.
ஆனாலும் அவர்கள் தாரைதப்பட்டையுடன் ஊர்வலமாக செல்ல முயன்றனர். அப்போது போலீசாருக்கும், மாணவர் அமைப்பினருக்கும் இடையே தள்ளு முள்ளு நடைபெற்றது. இதனால் அவர்களை போலீசார் எச்சரித்த னர். இதையடுத்து பேச்சுவார்த்தையை தொடர்ந்து மாணவர் அமைப்பினர் மாநாடு நடக்கும் மண்டபத்தை நோக்கி சென்றனர்.
Related Tags :
Next Story