களிமண், காய்கறியால் உருவங்கள் செய்து மாணவர்கள் அசத்தல்


களிமண், காய்கறியால் உருவங்கள் செய்து மாணவர்கள் அசத்தல்
x
தினத்தந்தி 3 Dec 2022 12:15 AM IST (Updated: 3 Dec 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

ஒன்றிய அளவிலான கலைத்திருவிழாவில் களிமண், காய்கறிகளால் மாணவ-மாணவிகள் உருவங்களை செய்து அசத்தினர்.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

ஒன்றிய அளவிலான கலைத்திருவிழாவில் களிமண், காய்கறிகளால் மாணவ-மாணவிகள் உருவங்களை செய்து அசத்தினர்.

களிமண்ணில் உருவம்

அரசு பள்ளி மாணவ-மாணவிகளின் தனித்திறமையை வெளிப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் கலைத்திருவிழா நடத்தப்படுகிறது. கொரோனா பாதிப்பிற்கு இந்த ஆண்டு பள்ளிகள் அளவில் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்கள் ஒன்றிய அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர். இதை தொடர்ந்து பொள்ளாச்சி வடக்கு ஒன்றிய அளவில் கடந்த 3 நாட்களாக கலைத்திருவிழா போட்டிகள் நடைபெற்றது.

கடைசி நாளாக நேற்று நுண் கலை, மொழித்திறன்கள் ஆகிய பிரிவுகளில் ஓவியும், இயற்கை காட்சி வரைதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. கோவில்களில் இருப்பது போன்று களிமண்ணால் விநாயகர், சிவன் போன்ற தெய்வங்களின் உருவங்களை மாணவ-மாணவிகள் தத்ரூபமாக செய்தனர். மேலும் காய்கறிகளால் விநாயகர் சிற்பம், வண்டி என பல உருவங்களை செய்து அசத்தினர். மேலும் கதை சொல்லுதல், கட்டுரை எழுதல் ஆகிய போட்டிகளும் நடைபெற்றது.

மாவட்ட போட்டிக்கு தகுதி

பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய அளவில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள பிரிவினருக்கு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கவின், கலை நுண்கலை போட்டிகளும், நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 9, 10 மற்றும் 11, 12-ம் வகுப்புகளுக்கு மொழித்திறன் போட்டிகளும் நடைபெற்றது.

ஆனைமலை ஒன்றிய அளவிலான போட்டிகள் ஒரு தனியார் கல்லூரியில் நடைபெற்றது. பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள், பறை அடித்தல், கரகாட்டம் மற்றும் களிமண்ணால் உருவங்கள் செய்தல் உள்பட பல்வேறு போட்டிகளில் மாணவ- மாணவிகள் திறமைகளை வெளிப்படுத்தினர். ஒன்றிய அளவிலான போட்டியில் வெற்றி பெறும் மாணவ- மாணவிகள் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story