இடிக்கப்பட்ட பள்ளி கட்டிடங்கள் மீண்டும் கட்டாததால் மாணவ- மாணவிகள் அவதி


இடிக்கப்பட்ட பள்ளி கட்டிடங்கள் மீண்டும் கட்டாததால் மாணவ- மாணவிகள் அவதி
x

கண்ணமங்கலம் பேரூராட்சியில் இடிக்கப்பட்ட இந்த ஆரம்ப பள்ளி கட்டிடங்கள் இடிக்கப்பட்டு மீண்டும் கட்டாததால் மாணவ-மாணவிகள் அவதி அடைந்துள்ளனர்.

திருவண்ணாமலை

கண்ணமங்கலம்

கண்ணமங்கலம் பேரூராட்சியில் இடிக்கப்பட்ட இந்த ஆரம்ப பள்ளி கட்டிடங்கள் இடிக்கப்பட்டு மீண்டும் கட்டாததால் மாணவ-மாணவிகள் அவதி அடைந்துள்ளனர்.

பழுதடைந்த கட்டிடங்கள் இடிப்பு

கண்ணமங்கலம் பேரூராட்சி பெருமாள் கோவில் தெருவில் ஊராட்சி ஒன்றிய இந்து ஆரம்பப் பள்ளி செயல்பட்டு வருகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த வார்டு சபை கூட்டம் இப்பள்ளியில் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட தலைமை ஆசிரியர் சாந்தி, பள்ளியில் கட்டிடங்கள் அனைத்தும் பழுதடைந்த நிலையில் உள்ளது, புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என்றார்.

இதையடுத்து பள்ளியில் உள்ள அனைத்து பழுதடைந்த கட்டிடங்கள், ஒரு மாடி வகுப்பறை கட்டிடம் தவிர அனைத்தும் இடித்து அப்புறப்படுத்தப்பட்டது.

கோவிலில் வகுப்புகள்

தற்போது பள்ளியில் படிக்கும் சுமார் 160 மாணவ- மாணவிகளுக்கு போதிய வகுப்பறை கட்டிடம் இல்லை. இதனால் அருகில் உள்ள பெருமாள் கோவிலில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

இதனால் மாணவ-மாணவிகள் மிகவும் அவதியடைந்து வருகின்றனர்.

இடிக்கப்பட்ட வகுப்பறை கட்டிடங்களுக்கு பதிலாக புதிய வகுப்பறை கட்டிடங்கள் கட்ட சேவூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. தனது சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.25 லட்சம் ஒதுக்கீடு செய்து தருவேன் என கூறினார்.

ஆனால் இதுவரை எவ்வித வகுப்பறை கட்டிடங்கள் கட்ட எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளது.

கட்டி தர வேண்டும்

எனவே வகுப்பறை கட்டிடம் கட்ட மேற்கு ஆரணி ஒன்றியம் சார்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் பள்ளி மாணவ-மாணவிகள் மதிய உணவிற்காக பழைய பள்ளி வளாகத்தில் சத்தணவு மையத்திற்கு மதிய நேரத்தில் வருகின்றனர். இதனால் சாலையில் வாகனங்கள் செல்லும்போது, மாணவ-மாணவிகள் அஜாக்கிரதையாக செல்லும் நிலை உள்ளது.

எனவே கண்ணமங்கலம் இந்து ஆரம்பப் பள்ளியில் இடிக்கப்பட்ட வகுப்பறை கட்டிடங்கள் உடனடியாக கட்டித்தர வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

1 More update

Next Story