மாணவர்கள் பள்ளியை புறக்கணித்து போராட்டம்


மாணவர்கள் பள்ளியை புறக்கணித்து போராட்டம்
x

மாணவர்கள் பள்ளியை புறக்கணித்து போராட்டம்

திருவாரூர்

திருத்துறைப்பூண்டி அருகே ஆப்பரக்குடி கிராமத்தில் ஆதியன் பழங்குடி வகுப்பை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஆதியன் பழங்குடியினர் (எஸ்.டி) பிரிவு சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என பலமுறை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தும், இதுவரை சாதி சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் பலமுறை பல்வேறு கட்ட போராட்டங்களிலும் ஈடுபட்டனர் ஆனாலும் இதுவரை சாதி சான்றிதழ்கள் வழங்கப்படவில்லை. இதனால் ஆதியன் பழங்குடியினத்தினர் மேற்படிப்பு படிக்க முடியாத நிலையில் உள்ளனர். எனவே உடனடியாக எஸ்.டி. பிரிவு சாதி சான்றிதழ் வழங்கும் வரை பள்ளிகளுக்கு மாணவ-மாணவிகளை அனுப்ப போவதில்லை என்று கூறி நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது 50-க்கும் மேற்பட்ட பிள்ளைகளை வீட்டிலேயே இருந்து பள்ளியை புறக்கணித்து நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


Next Story