25 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம்


25 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம்
x

இலவச கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் 25 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு வருகிற 20-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர்


இலவச கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் 25 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு வருகிற 20-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இட ஒதுக்கீடு

இதுபற்றி கூறப்பட்டுள்ளதாவது:-

மத்திய அரசு கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் ஒவ்வொரு கல்வி ஆண்டிலும் தனியார் பள்ளிகளில் தொடக்கநிலை வகுப்புகளில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள ஏழை, எளிய மாணவ-மாணவிகளை சேர்ப்பதற்கு 25 சதவீத இட ஒதுக்கீடு செய்கிறது.

இந்த இட ஒதுக்கீட்டில் தனியார் பள்ளியில் சேர்க்கப்படும் மாணவ-மாணவிகளுக்கு கல்வி கட்டணத்தை சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு மத்திய அரசே வழங்கி விடும். இந்த இட ஒதுக்கீடுக்கான விண்ணப்பங்களை வருகிற ஏப்ரல் 20-ந் தேதி வரை அனுப்பலாம். எல்.கே.ஜி. முதல் 9-ம் வகுப்பு வரை மாணவ-மாணவிகள் சேர்க்கப்படுவர். இந்த வகுப்புகளுக்கு விண்ணப்பிக்க 1.8.2019 முதல் 31.7.2020 வரை பிறந்த குழந்தைகள் தகுதி உடையவர்களாவர்.

ஆவணங்கள்

இந்த இட ஒதுக்கீட்டின் கீழ விண்ணப்பிக்க குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழ், ஆதார் அட்டை, புகைப்படம், பெற்றோரின் ஆதார் அட்டை, சாதி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், வருமானச் சான்றிதழ், ரேஷன் கார்டு ஆகிய ஆவணங்களின் நகல்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

ஒரே பள்ளிக்கு அதிக எண்ணிக்கையில் மாணவ-மாணவிகள் விண்ணப்பித்து இருந்தால் குலுக்கல் முறையில் மாணவ-மாணவிகள் தேர்ந்தெடுக்கப்படுவர். இதுபற்றி மாணவ-மாணவிகளின் பெற்றோருக்கு குறுஞ்செய்தி மூலம் தகவல் அனுப்பப்படும். மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் மாவட்டங்களில் 25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் முழுமையாக ஏழை, எளிய மாணவ-மாணவிகளை சேர்க்க மாவட்ட பள்ளிக்கல்வித்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.


Next Story