ராணுவ கல்லூரியில் சேர மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம்


ராணுவ கல்லூரியில் சேர மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 13 Sept 2023 12:15 AM IST (Updated: 13 Sept 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

டேராடூனில் உள்ள ராஷ்ட்ரிய இந்திய ராணுவ கல்லூரியில் சேர சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த மாணவ மாணவிகள் அக்டோபர் 15-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை

சிவகங்கை

டேராடூனில் உள்ள ராஷ்ட்ரிய இந்திய ராணுவ கல்லூரியில் சேர சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த மாணவ மாணவிகள் அக்டோபர் 15-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

இந்திய ராணுவ கல்லூரி

சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது,

டேராடூனில் உள்ள ராஷ்ட்ரிய இந்திய ராணுவ கல்லூரியில் ஜீலை 2024 பருவத்தில் மாணவ-மாணவிகள் சேர்வதற்கான தேர்வு டிசம்பர் மாதம் 2-ந் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது.

எழுத்து தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு மட்டும் நேர்முகத்தேர்வு நடத்தப்படும்.

எழுத்துதேர்வு ஆங்கிலம், கணக்கு மற்றும் பொது அறிவு ஆகிய தாள்கள் கொண்டது. இத்தேர்விற்கு ஆங்கிலம் அல்லது இந்தியில் விடையளிக்க வேண்டும். ஒவ்வொரு பாடத்திலும் தேர்வுபெற நேர்முகத்தேர்வு உள்பட குறைந்தபட்ச மதிப்பெண் 50 சதவீதம் ஆகும்.

விண்ணப்ப படிவம்

இத்தேர்விற்கான விண்ணப்ப படிவத்தை பொதுபிரிவினர் ரூ.600-ம் மற்றும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் சாதிச்சான்றுடன் ரூ.555-யும் ராஷ்ட்ரிய இந்திய ராணுவ கல்லூரி இணையதளத்தின் மூலமாகவோ அல்லது

கமாண்டர், ராஷ்ட்ரிய இந்தியன் ராணுவ கல்லூரி, கார்கிகான்ட், டேராடூன், உத்ரகாண்ட்-248003 என்ற முகவரிக்கு வரையோலை மூலமாகவோ அனுப்பி பெற்றுக்கொள்ளலாம். இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.

தகுதிகள்

விண்ணப்பதாரர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் தமிழ்நாட்டில் வசிப்பவராக இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரர் 1.7.2024 அன்று 11½ வயது நிரம்பியவராகவும் 13 வயதை அடையாதவராகவும் இருத்தல் வேண்டும். இந்த வயது வரம்பில் எந்த தளர்வும் கிடையாது. விண்ணப்பதாரர் மேற்குறிப்பிட்ட ராணுவக்கல்லுாரியில் சேர அனுமதிக்கப்படும்போது 1.7.2024-ல் அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் 7-ம் வகுப்பு படிப்பவராகவோ அல்லது தேர்ச்சி பெற்றவராகவோ இருத்தல் வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்கள் (இரட்டையாக) தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையசாலை, பூங்காநகர், சென்னை 600003 என்ற முகவரிக்கு அக்டோபர் 15-ந் தேதி மாலை 5.45 மணிக்குள் வந்து சேர வேண்டும். மேலும் கூடுதல் விவரங்களை www.rimc.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story