முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்


முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்
x

முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்

நாகப்பட்டினம்

நாகூர் மீன்வள பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என துணைவேந்தர் சுகுமார் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான விண்ணப்பம்

தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழத்தில் 2022-23-ம் கல்வி ஆண்டிற்கான முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான இணையதள விண்ணப்பங்கள் கடந்த 2.11.2022 அன்று வெளியிடப்பட்டது. இப்பல்கலைக்கழகத்தில் 2 வருட முதுநிலை படிப்புகள் மீன்வள அறிவியல் (13 பாடப்பிரிவுகள்), மீன்வள பொறியியல் (2 பாடப்பரிவுகள்), உயிர்தொழில்நுட்பவியல் (2 பாடப்பரிவுகள்), வணிக நிர்வாகவியல் (மீன்வள வணிக மேலாண்மை) மற்றும் 1 வருட முதுநிலை பட்டயப்படிப்புகள் (2 பாடப்பிரிவுகள்) வழங்கப்பட்டு

வருகின்றன. இந்த கல்வி ஆண்டில், இந்திய மாணவர்களுக்கு முதுநிலை மீன்வள அறிவியல் பட்டப்படிப்பில் 59 இடங்களும், முதுநிலை மீன்வள பொறியியல் பட்டப்படிப்பில் 8 இடங்களும், முதுநிலை உயிர்தொழில்நுட்பவியலில் 5 இடங்களும் (சுயசார்பு), முதுநிலை வணிக நிர்வாகவியல் (மீன்வள நிர்வாக மேலாண்மை) பட்டப்படிப்பில் (சுயசார்பு) 20 இடங்களும் மற்றும் முதுநிலை பட்டயப்படிப்பில் 20 இடங்களும் நிரப்பப்பட உள்ளன.

இணையதளத்தில் பதிவேற்றம்

அதுமட்டுமல்லாமல் முதுநிலை மீன்வள அறிவியல் பட்டப்படிப்பில் வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு 6 இடங்களும், வெளிநாட்டினவர்களுக்கு 2 இடங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன. இப்பல்கலைக்கழத்தில் முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர்ந்து பயில 2.11.2022 தேதி முதல் பல்கலைக்கழக இணையதளம்(www.tnjfu.ac.in) மூலம் விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை இணைய தளத்தில் பதிவேற்றம் செய்ய கடைசி வருகிற 4.12.2022 நாள் ஆகும்.

பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் தபால் மூலம் சமர்ப்பிக்கப்பட வேண்டியதில்லை.

விண்ணப்பித்த மாணவர்களுக்கு, தகுதி தேர்வு மற்றும் நேரடி கலந்தாய்வானது

20.12.2022 மற்றும் 21.12.2022 ஆகிய தேதிகளில் சென்னை வாணியஞ்சாவடியில் உள்ள முதுநிலை மீன்வள பட்டப்படிப்பு நிலையத்தில் வைத்து

நடைபெறும். ேமலும் விவரங்களுக்கு (04365-256430) அல்லது (9442601908) என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம். இ்வ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story