பளுதூக்குதல் விளையாட்டிற்கான முதன்மை நிலை மையத்தில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்


பளுதூக்குதல் விளையாட்டிற்கான முதன்மை நிலை மையத்தில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்
x

பளுதூக்குதல் விளையாட்டிற்கான முதன்மை நிலை மையத்தில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை

வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியில் உள்ள பளுதூக்குதல் விளையாட்டிற்கான முதன்மை நிலை மையத்தில் பள்ளிகளில் 9-ம் மற்றும் 11-ம் வகுப்புகள், கல்லூரிகளில் இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகளில் முதலாம் ஆண்டு, பன்னாட்டு, தேசிய சீனியர் பிரிவில் பதக்கம் வென்று கல்லூரி படிப்பை முடித்த மாணவ, மாணவிகள் தகுதியின்படி தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

எனவே இந்த விளையாட்டு மையத்தில் தங்கி பயிற்சி பெற விருப்பம் உள்ள மாணவ, மாணவிகள் www.sdat.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள விண்ணப்பத்தினை ஆன்லைனில் பூர்த்தி செய்தல் வேண்டும். விண்ணப்பப் படிவத்தினை ஆன்லைனில் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வருகிற 8-ந்தேதி (சனிக்கிழமை) கடைசி நாளாகும்.

மேலும் 2022-23-ம் ஆண்டில் வேலூர் சத்துவாச்சாரி பளுதூக்கும் முதன்மை நிலை மையத்திற்கு மாணவ, மாணவிகளை தேர்ந்தெடுப்பதற்கான மாநில அளவிலான தேர்வுகள் வருகிற 11-ந்தேதி காலை 9 மணி அளவில் நடைபெற உள்ளது. மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலரை 04175-233169 என்ற தொலைபேசியில் அலுவலக நேரங்களில் தொடர்பு கொள்ளலாம்.

இந்த தகவலை திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் தெரிவித்து உள்ளார்.


Next Story