மாணவர்கள் ஆதார், செல்போன் எண்ணை பயன்படுத்தி வங்கி கணக்கு தொடங்கலாம்


மாணவர்கள் ஆதார், செல்போன் எண்ணை பயன்படுத்தி வங்கி கணக்கு தொடங்கலாம்
x
தினத்தந்தி 4 May 2023 12:15 AM IST (Updated: 4 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தபால் நிலையங்களில் பயோமெட்ரிக் சாதனம் மூலம் மாணவர்கள் ஆதார், செல்போன் எண்ணை பயன்படுத்தி வங்கி கணக்கு தொடங்கலாம் கலெக்டர் தகவல்

கடலூர்

கடலூர்

2022-2023-ம் கல்வியாண்டில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கல்வி உதவி தொகை பெற ஏதுவாக, ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு இல்லாத மாணவர்களுக்கு, தபால் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியின் மூலம், பள்ளிகளிலேயே ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு தொடங்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

தற்போது, பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு இல்லாத மாணவர்கள் அருகிலுள்ள தபால் நிலையங்கள் மற்றும் தபால்காரருக்கு வழங்கப்பட்டுள்ள ஸ்மார்ட் போன் மற்றும் பயோமெட்ரிக் சாதனத்தின் மூலம், மாணவர்களின் ஆதார் மற்றும் செல்போன் எண்ணை மட்டும் பயன்படுத்தி விரல்ரேகை மூலம் ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு தொடங்கி கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.


Next Story