அரசு பள்ளியில் மண் சுமந்த மாணவ-மாணவிகள்
நாட்டறம்பள்ளி அரசு பள்ளியில் மண் சுமக்கும்பணியில் மாணவ-மாணவிகள் ஈடுபடுத்தப்பட்டனர்.
திருப்பத்தூர்
நாட்டறம்பள்ளி அதிபெரமனூர் பகுதியில் அரசு நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது. நேற்று காலை பள்ளிக்கு வந்த மாணவ- மாணவிகளை 9.30 மணி முதல் 11.30 மணி வரை தொடர்ந்து 2 மணி நேரம் மண் அள்ளி கொட்டும் பணியில் சில ஆசிரியர்கள் ஈடுபடுத்தி உள்ளனர்.
கடந்த ஆண்டு இந்த பள்ளியில் 92 மாணவ- மாணவிகள் படித்த நிலையில், இந்த ஆண்டு 60 மாணவர்கள் மட்டுமே கல்வி பயின்று வருகின்றனர்.
மாணவ- மாணவிகளை பள்ளியில் ஆசிரியர்கள் வேலை வாங்கும் சம்பவம் பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story