ஆரணி பகுதியில் பஸ்களின் ஏணியில் ஏறி மாணவர்கள் ஆபத்தான பயணம் செய்யும்
ஆரணி பகுதியில் பஸ்களின் ஏணியில் ஏறி மாணவர்கள் ஆபத்தான பயணம் செய்யும் நிலை உள்ளது.
ஆரணி
ஆரணி பகுதியில் பஸ்களின் ஏணியில் ஏறி மாணவர்கள் ஆபத்தான பயணம் செய்யும் நிலை உள்ளது.
ஆரணியில் இருந்து வந்தவாசி பகுதிக்கு செல்லும் பஸ்களில் அளவுக்கு அதிகமான பயணிகள் ஏற்றப்பட்டு செல்கின்றனர். கல்லூரி மாணவர்களும், இளைஞர்களும் இடம் கிடைக்காமல் பஸ்சின் கூரையிலும் பின்பக்கம் உள்ள ஏணிப்படியில் நின்றும் ஆபத்தான முறையில் பயணம் செய்கின்றனர்.
மாணவிகளும், பெண்களும் பஸ்சுக்குள் கூட்ட நெரிசலில் சிக்கி தவிக்கின்றனர். இது சம்பந்தமாக பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், வட்டார போக்குவரத்து அலுவலருக்கு பலமுறை புகார் தெரிவித்தும் அவர்கள் பாராமுகமாகவே உள்ளனர். எனவே இதுபோன்ற பயணிகள் பயணம் செய்வதை தவிர்க்க காலை 7 மணி முதல் 10 மணி வரையும் பிற்பகல் 3 மணி முதல் இரவு 7 மணி வரையும் தேவையான அளவுக்கு கூடுதல் பஸ்களை இயக்கி பயணிகளின் பாதுகாப்பான பயணத்துக்கு வழிவகை செய்ய வேண்டும் என அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.