மாணவர்களுக்கு பரிசு


மாணவர்களுக்கு பரிசு
x

மன்னார்குடி அரசு உதவி பெறும் தேசிய மேல்நிலைப் பள்ளியில் இலக்கிய மன்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

திருவாரூர்

மன்னார்குடி;

மன்னார்குடி அரசு உதவி பெறும் தேசிய மேல்நிலைப் பள்ளியில் இலக்கிய மன்ற விழா நடைபெற்றது. விழாவுக்கு தலைமை ஆசிரியர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். தமிழ் ஆசிரியர் அறிவு வரவேற்று பேசினார். உதவி தலைமை ஆசிரியர் திலகர், முதுகலை ஆசிரியர் அன்பரசு, தமிழ் ஆசிரியர் எழுபரிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் தலைமை ஆசிரியரும் பள்ளியின் நிர்வாக குழு உறுப்பினருமான சேதுராமன் இலக்கிய மன்றம் குறித்து பேசினார்.சிறப்பு விருந்தினராக திருவாரூர் தமிழ் சங்க தலைவரும் ஓய்வு பெற்ற தமிழாசிரியருமான சண்முகவடிவேல் பங்கேற்று திருக்குறள் வாழ்வு என்ற தலைப்பில் பேசினார். விழாவில் சுதந்திர தினத்தன்று 76 நிமிடங்கள் 76 வினாடிகள் தொடர்ந்து சிலம்பம் சுற்றி இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில் இடம் பிடித்த 7-ம் வகுப்பு மாணவன் விக்ரமுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும் இலக்கிய மன்ற விழா தொடர்பாக கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முடிவில் தமிழ் ஆசிரியர் செல்வராஜ் நன்றி கூறினார்.

1 More update

Next Story