ஆண்டாள் கோவிலில் மாணவ-மாணவிகள் ஒருசேர பாடிய திருப்பாவை பாடல்கள்
ஆண்டாள் கோவிலில் மாணவ-மாணவிகள் ஒருசேர திருப்பாவை பாடல்கள் பாடினர்.
விருதுநகர்
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆண்டாள் பாடிய திருப்பாவை பாடலை போற்றும் விதமாக இந்து சமய அறநிலையத்துறை மற்றும் தமிழ்நாடு இசை கல்லூரி சார்பாக நாதம் 108 நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்து திருப்பாவை சிறப்புகள் குறித்து பேசினார்.
இதில் ஆண்டாள் கோவில் தக்கார் ரவிச்சந்திரன், ஒன்றிய சேர்மன் மல்லி ஆறுமுகம், நகர்மன்ற சேர்மன் தங்கம் ரவி கண்ணன், நகர்மன்ற துணைத்தலைவர் செல்வமணி, முன்னாள் நகர வங்கி தலைவர் ராதாகிருஷ்ணன் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். முன்னதாக இசை கல்லூரி மாணவ-மாணவிகள் திருப்பாவை பாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
Related Tags :
Next Story