பஸ்சில் படிக்கட்டில் தொங்கி கொண்டு ஆபத்தான பயணம் செய்யும் மாணவர்கள்

பஸ்சில் படிக்கட்டில் தொங்கி கொண்டு ஆபத்தான பயணம் செய்யும் மாணவர்கள்
x

நாகூர் வழியாக திருவாரூர் செல்லும் பஸ்சில் படிக்கட்டில் மாணவர்கள் தொங்கி கொண்டு ஆபத்தான பயணம் செய்கின்றனர். எனவே கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாகப்பட்டினம்

நாகூர்:

நாகூர் வழியாக திருவாரூர் செல்லும் பஸ்சில் படிக்கட்டில் மாணவர்கள் தொங்கி கொண்டு ஆபத்தான பயணம் செய்கின்றனர். எனவே கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆபத்தான பயணம்

நாகையில் இருந்து தினந்தோறும் காலை, மாலை நேரத்தில் நாகூர் வழியாக திருவாரூருக்கு அரசு பஸ் இயக்கப்படுகிறது. இந்த பஸ் ஒரு நாளைக்கு 2 முறை மட்டுமே இயக்கப்படுகிறது. பள்ளி ,கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் அதிக அளவில் நாகூர், நரிமணம், கங்களாஞ்சேரி வழியாக இந்த பஸ்சில் திருவாரூருக்கு சென்று வருகின்றனர்.

இந்த பஸ்சில் காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் செல்வதால் கூட்டம் அலைமோதும். இதனால் மாணவர்கள் பஸ் படிக்கட்டுகளில் தொங்கி கொண்டு ஆபத்தான பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

கூடுதல் பஸ்கள்

இந்த வழி தடத்தில் அதிக பஸ்கள் இயக்காததால் மாணவ-மாணவிகள் அவதிப்பட்டு வருகின்றனர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் நலன் கருதி நாகூர் வழியாக திருவாரூருக்கு கூடுதல் பஸ்கள் இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story