பல்வேறு போட்டிகளில் அழகப்பா அரசு கல்லூரி மாணவர்கள் வெற்றி


பல்வேறு போட்டிகளில் அழகப்பா அரசு கல்லூரி மாணவர்கள் வெற்றி
x
தினத்தந்தி 25 Aug 2023 12:15 AM IST (Updated: 25 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பல்வேறு போட்டிகளில் அழகப்பா அரசு கல்லூரி மாணவர்கள் வெற்றி பெற்றனர்.

சிவகங்கை

காரைக்குடி

சிவகங்கை இந்து சமய அறக்கட்டளை சார்பில் வள்ளலார் முப்பெரும் விழாவை முன்னிட்டு காரைக்குடி அழகப்பா மாதிரி மேல்நிலைப்பள்ளியில் கல்லூரி மாணவர்களுக்கு ஒப்புவித்தல், ஓவியம், பாடல், கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகள் நடைபெற்றது. இதில் அழகப்பா அரசு கலைக் கல்லூரி சார்பில் 30-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் போட்டிகளில் கலந்துகொண்டனர். ஒப்புவித்தல் போட்டியி்ல் தொழில் நிர்வாகவியல் 2-ம் ஆண்டு மாணவி கீர்த்தனா முதல் பரிசும், கணினி அறிவியல் 3-வது ஆண்டு மாணவி ரதிமலர் 2-வது பரிசும் பெற்றனர். பாட்டு போட்டியில் ஆங்கிலத்துறை முதலாமாண்டு மாணவி அன்னபூரணி முதல் பரிசும், கட்டுரை போட்டியில் ஆங்கிலத்துறை 3-வது ஆண்டு மாணவி பூமிகா 2-வது பரிசும், ஓவியப்போட்டியில் ஆங்கிலத்துறை முதலாமாண்டு மாணவர் யுவராஜ் 2-வது பரிசும் பெற்றனர். பரிசு பெற்ற மாணவ, மாணவிகளை கல்லூரி முதல்வர் பெத்தாலெட்சுமி, நுண்கலை மன்ற ஒருங்கிணைப்பாளர் மார்டின் ஜெயப்பிரகாஷ் மற்றும் நுண்கலை மன்ற உறுப்பினர்கள் லெட்சுமணக்குமார், ஷர்மிளா ஆகியோர் பாராட்டினர்.


Next Story