பிறப்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் இன மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்


பிறப்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் இன மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
x

மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் படிக்கும் பிறப்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் இன மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை

மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் படிக்கும் பிறப்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் இன மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

கல்வி உதவித்தொகை

மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., ஐ.ஐ.ஐ.டி., என்.ஐ.டி. மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பயிலும் தமிழகத்தை சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மாணவ, மாணவிகள் 2022-23-ம் கல்வி ஆண்டிற்கான கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் உள்ள மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., ஐ.ஐ.ஐ.டி., என்.ஐ.டி. மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு பயிலும் தமிழ்நாட்டை சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவர், மாணவிகளில் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்திற்கு மிகாமல் உள்ளவர்களுக்கு கல்வி உதவித் தொகையாக மாணவர் ஒருவருக்கு ஆண்டிற்கு அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரை வழங்குவதற்கு தமிழ்நாடு அரசால் ஆணையிடப்பட்டு உள்ளது.

ஜனவரி 31-ந் தேதிக்குள்

இந்த கல்வி உதவித் தொகைக்கு 2022-23-ம் கல்வியாண்டில் புதியதாக விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான மாணவர்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்களை அணுகியோ அல்லது http://bcmbcmw.tn.gov.in./welfschemes.htm#scholarshipschemes என்ற இணையதள முகவரியில் இருந்து பதிவிறக்க செய்து கொள்ளலாம்.

மேலும் மேற்படி 2022-23-ம் நிதியாண்டிற்கான புதிய கல்வி உதவித்தொகை விண்ணப்பத்தினை மாணவர்கள் பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

கல்வி நிறுவனங்கள் தங்களது சான்றொப்பத்துடன் தகுதியான விண்ணப்பித்தினை பரிந்துரை செய்து ஆணையர், பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககம், எழிலகம் இணைப்பு கட்டிடம், 2-வது தளம், சேப்பாக்கம், சென்னை-05. என்ற முகவரிக்கு அல்லது tngovtiitscholarship@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு பூர்த்தி செய்த விண்ணப்பிங்களை வருகிற ஜனவரி மாதம் 31-ந் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story