1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்பு


1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்பு
x

திருப்பத்தூர் மாவட்டத்தில் 1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் கோடை விடுமுறை முடிந்து கடந்த 12-ந்தேதி 6 முதல் 12-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பள்ளி திறக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து நேற்று 1 முதல் 5-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு நேற்று பள்ளி திறக்கப்பட்டது. மாவட்டத்தில் உள்ள 579 பள்ளிகளிலும் மாணவ, மாணவிகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதன்படி, பொம்பிகுப்பம் ஊராட்சி இந்திராநகர் தொடக்கப்பள்ளிக்கு மேளதாளத்துடன் மாணவர்கள் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு நோட்டு, புத்தகம் வழங்கப்பட்டது.

இதேபோல் ஏ.கே.மோட்டூர் ஊராட்சிக்குட்பட்ட புதுப்பூங்குளம், அண்ணாநகர், ஆத்துமேடு ஆகிய தொடக்கப்பள்ளிகளில் மாணவர்களுக்கு பூங்கொத்து கொடுத்து ஆசிரியர்கள் வரவேற்றனர். பள்ளி திறந்த முதல் நாளிலேயே அனைவருக்கும் விலையில்லா பாடப்புத்தம் வழங்கப்பட்டது.


Next Story