கிணத்துக்கடவு அரசு பள்ளி மாணவர்கள் முதலிடம்


கிணத்துக்கடவு அரசு பள்ளி மாணவர்கள் முதலிடம்
x
தினத்தந்தி 7 Nov 2022 12:15 AM IST (Updated: 7 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

மாவட்ட அளவில் கலை போட்டியில் கிணத்துக்கடவு அரசு பள்ளி மாணவர்கள் முதலிடம் பிடித்தனர்.

கோயம்புத்தூர்

கிணத்துக்கடவு,

தமிழக கலை பண்பாட்டு துறை சார்பில், கலை போட்டி பொள்ளாச்சி, கோவை கல்வி மாவட்டத்தில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் மாணவர்களுக்கு கோவை ஒண்டிப்புதூர் ஆண்கள் அரசு மேல்நிலை பள்ளியில் நடைபெற்றது. மொத்தம் 120 மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர். போட்டியில் 3டி பிரிவில் மயிலாட்டம் மணல் சிற்பம் வரைந்த கிணத்துக்கடவு அரசு மேல்நிலை பள்ளி 10-ம் வகுப்பு மாணவி ஆர்.கலைச்செல்வி மாவட்ட அளவில் முதலிடம் பிடித்தார்.

அதே பள்ளியை சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவர் ஆர்.சி.தன்வந்த் உள்ளூர் தொன்மை பிரிவுக்கான போட்டியில் விவசாயம் குறித்த பொம்மைகள் தயாரிப்பதில் மாவட்ட அளவில் முதலிடத்தை பிடித்தார். 2டி பெயிண்டிங் பிரிவில் 11-ம் வகுப்பு மாற்றுத்திறனாளி மாணவர் வி.லோகித் 3-ம் இடத்தை பிடித்தார். முதலிடம் பிடித்த 2 பேர் வருகிற 15-ந் தேதி நாமக்கல்லில் நடைபெற உள்ள மாநில அளவிலான போட்டிக்கு தேர்வாகி உள்ளனர். மாநில அளவில் நடைபெறும் போட்டிக்கு தகுதி பெற்ற 2 பேரையும் பள்ளி தலைமை ஆசிரியர் (பொறுப்பு) ராதிகா, ஓவிய ஆசிரியை கவுசல்யா, ராஜலட்சுமி மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் பாராட்டினர்.


Next Story