நத்தம் அரசு பள்ளி மாணவர்கள் தேர்வு
மாவட்ட அளவிலான கோ-கோ போட்டிக்கு நத்தம் அரசு பள்ளி மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
திண்டுக்கல்
திண்டுக்கல் மாவட்ட அளவிலான குறுவட்ட விளையாட்டு போட்டி நத்தம் துரைக்கமலம் அரசு மாதிரி மேல்நிலைபள்ளியிலும், செந்துறை அரசு மேல்நிலைப்பள்ளியிலும் நடந்தது. இதில் 14, 17, 19, வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு கோ-கோ போட்டிகள் நடந்தது. இதில் மொத்தம் 33 அணிகள் பங்கேற்றன. முடிவில் 14, 17, மற்றும் 19 வயதுக்குட்பட்டோருக்கான போட்டிகளில் துரைக்கமலம் அரசு மாதிரி மேல்நிலைபள்ளி பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்றனர். இதனையடுத்து அந்த பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவிலான கோ-கோ போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர். மாவட்ட அளவிலான போட்டிக்கு இந்த அணியினர் தகுதி பெற்றிருப்பது இது 6-வது முறை ஆகும். சாதனை படைத்த மாணவர்களை பள்ளி தலைமை ஆசிரியர் வீரமணி, விளையாட்டுத்துறை இயக்குநர் சம்சுதீன், உடற்கல்வி ஆசிரியர் சோலைமலை ஆசிரியர்கள், ஆசிரியைகள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
Related Tags :
Next Story