ராமநாதபுரம் மாவட்டத்தில் 96.30 சதவீதம் பேர் தேர்ச்சி
ராமநாதபுரம் மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வில் 96.30 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வில் 96.30 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மாநில அளவில் 12-வது இடம்
தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று காலை வெளியிடப்பட்டன. ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்த ஆண்டு பிளஸ்-2 தேர்வினை 6 ஆயிரத்து 790 மாணவர்களும், 7 ஆயிரத்து 516 மாணவிகளும் என மொத்தம் 14 ஆயிரத்து 306 மாணவ, மாணவிகள் எழுதினர். இதில் 6 ஆயிரத்து 413 மாணவர்களும், 7 ஆயிரத்து 364 மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் தேர்ச்சி சதவீதம் 94.45. மாணவிகள் தேர்ச்சி சதவீதம் 97.98.
மொத்தம் மாவட்டத்தில் 96.30 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதத்தில் மாநில அளவில் ராமநாதபுரம் 12-வது இடத்தை பெற்றுள்ளது.
கலெக்டர் வாழ்த்து
ராமநாதபுரம் மாவட்டத்தில் 70 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 18 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளன. அரசு உதவிபெறும் 37 மேல்நிலைப்பள்ளிகளில் 8 பள்ளிகளும், 53 மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகளில் 47 பள்ளிகளும் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.
அதேபோல் வேதியியலில் 4 பேரும், உயிரியலில் ஒருவரும், இயற்பியலில் 99 பேரும், கணிதத்தில் 99 பேரும், ஆங்கிலத்தில் 92 பேரும், தமிழில் 97 பேரும் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ராமநாதபுரம் கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.