மாணவர்கள் ஆர்ப்பாட்டம்


மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
x

நெல்லையில் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருநெல்வேலி

பேட்டை:

மத்திய அரசின் இந்தி திணிப்பை கண்டித்து, தமிழ்நாடு முழுவதும் இந்திய மாணவர் சங்கத்தினர் வாயில் கருப்பு துணி கட்டி நூதன போராட்டம் நடத்தினர். நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் முன்பும் அந்த சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சங்க பல்கலைக்கழக கிளை தலைவர் நிதிஷ் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் நிருபன் சக்ரவர்த்தி கண்டன உரையாற்றினார். எஸ்.எப்.ஐ. முன்னாள் நிர்வாகி சைலஸ் அருள்ராஜ் வாழ்த்தி பேசினார். கிளை செயலாளர் ஆனந்த் ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்து பேசினார். இதில் சங்க மாவட்ட தலைவர் சங்கீதா, நிர்வாகிகள் கலையரசன், சூர்யா, சரண் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story