பழுதடைந்த அரசு டவுன் பஸ்சை தள்ளி சென்ற மாணவர்க ள்
மயிலாடுதுறையில் பழுதடைந்த அரசு டவுன் பஸ்சை தள்ளி சென்ற மாணவர்கள் சமூக வலைத ளங்களில் வீடியோ வைரல்
மயிலாடுதுறையில் அரசு போக்குவரத்து பணிமனையில் இருந்து 75 நகர மற்றும் புறநகர் பஸ்கள் தினமும் இயக்கப்பட்டு வருகின்றன. நகர பஸ்கள் கிராம பகுதிகளுக்கும், பள்ளி கல்லூரி பகுதிகளுக்கும் இயக்கப்பட்டு வருகிறது. இதில் குறிப்பிட்ட வழித்தடமான மணல்மேடு செல்லும் குறைந்த அளவிலேயே இயக்கப்படும் அரசு பஸ்களில் அதிகளவில் மாணவ- மாணவிகள் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் டவுன் பஸ்கள் அடிக்கடி பழுது ஏற்படுவதாக கூறப்படுகிறது. நேற்று மயிலாடுதுறையில் இருந்து சித்தமல்லி வரை சென்று வரும் பஸ் பழுதானது. நே ற்று மதியம் 1.30 மணி அளவில் மயிலாடுதுறை நகரில் காந்திஜி சாலையை கடந்த போது அந்த அரசு டவுன் பஸ் திடீரென நின்றது. இந்த பஸ்சை தள்ளு, தள்ளு என்ற வடிவேலின் வசனத்திற்கு ஏற்ப மாணவர்கள் தள்ளும் நிலைமை ஏற்பட்டது. நகர பகுதியில் சாலை யின் நடுவே நின்ற பஸ்சை மாணவர்கள் தள்ளும் காட்சி சமூக வலை தளங்களில் வைரல் ஆகி வருகிறது.