ஆதிதிராவிடர் நல விடுதிகளில் தங்கி பயில மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
ஆதிதிராவிடர் நல விடுதிகளில் தங்கி பயில மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆதிதிராவிடர் நல விடுதிகளில் தங்கி பயில மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் 29 பள்ளி மாணவர் விடுதிகளும், 18 பள்ளி மாணவி விடுதிகளும் என மொத்தம் 47 பள்ளி மாணவ, மாணவிகள் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. 2023-24-ம் கல்வியாண்டிற்கு ஆதிதிராவிடர் நல விடுதிகளில் தங்கி கல்வி பயில விண்ணப்பிக்கும் மாணவர்களை தேர்வு செய்ய விடுதி மேலாண்மை அமைப்பு என்ற செயலியின் மூலம் இணைய வழியில் மாணவர்கள் சேர்க்கை நடத்த அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது.
அதன்படி விதிமுறைகள், வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி https://tnadw.hms.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் நேரடியாகவோ அல்லது காப்பாளர், காப்பாளினியின் உதவியுடனோ விண்ணப்பிக்கலாம். பெற்றோரை இழந்த மாணவ, மாணவிகள் மற்றும் மாற்றுத் திறனாளி மாணவ, மாணவிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
மேலும் மாணவ, மாணவிகளுக்கு விடுதிகளில் தரமான உணவு காலை, மதியம் மற்றும் இரவு ஆகிய 3 வேலைகளிலும் வழங்கப்படுகிறது. இணையதளத்தில் மாணவ, மாணவிகள் பள்ளி விடுதிகளில் சேர வருகிற 30-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் முருகேஷ் தெரிவித்து உள்ளார்.