ஏரியூர் அருகே வகுப்பறைக்குள் வரும் விஷ பூச்சிகள்:ரேஷன் கடை வராண்டாவில் படிக்கும் மாணவர்கள்அரசு பள்ளியின் அவலம் மாறுமா? பெற்றோர் எதிர்பார்ப்பு

ஏரியூர் அருகே வகுப்பறைக்குள் வரும் விஷ பூச்சிகள்:ரேஷன் கடை வராண்டாவில் படிக்கும் மாணவர்கள்அரசு பள்ளியின் அவலம் மாறுமா? பெற்றோர் எதிர்பார்ப்பு
x

ஏரியூர் அருகே ஊத்துபள்ளத்தூரில் வகுப்பறைக்குள் வரும் விஷ பூச்சிகளால் மாணவ-மாணவிகள் ரேஷன் கடை வராண்டாவில் அமர்ந்து படித்து வருகின்றனர். அரசு பள்ளியின் அவலம் மாறுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

தர்மபுரி

ஏரியூர்

ஏரியூர் அருகே ஊத்துபள்ளத்தூரில் வகுப்பறைக்குள் வரும் விஷ பூச்சிகளால் மாணவ-மாணவிகள் ரேஷன் கடை வராண்டாவில் அமர்ந்து படித்து வருகின்றனர். அரசு பள்ளியின் அவலம் மாறுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

பூச்சித்தொல்லை

தர்மபுரி மாவட்டம் ஏரியூர் ஒன்றியத்திற்குட்பட்ட பத்திரஅள்ளி ஊராட்சி ஊத்துபள்ளத்தூரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் அந்த பகுதியை சேர்ந்த 18 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு 2 ஆசிரியர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பள்ளி வகுப்பறைக்குள் விஷ பூச்சி தொல்லை அதிகமாக இருந்தது.

இதனால் மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் சிரமத்திற்குள்ளாகினர். இதன் காரணமாக ஆசிரியர்கள் வகுப்பறைகளை பூட்டி விட்டு அருகில் உள்ள ரேஷன் கடை வளாகத்தில் மாணவ-மாணவிகளுக்கு பாடம் நடத்தி வருகின்றனர். மாணவர்கள் வராண்டா பகுதியில் உள்ள குறுகிய இடத்தில் அமர்ந்து படித்து வருகின்றனர். இதனால் அரசு பள்ளியின் அவலம் மாறுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

நடவடிக்கை எடுக்க வேண்டும்

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், பள்ளி வகுப்பறைக்குள் விஷ பூச்சித்தொல்லை அதிக அளவில் உள்ளது. இதனால் குழந்தைகள் பூச்சி கடியால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பள்ளி வகுப்பறைக்குள் விஷ பூச்சித்தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலமுறை கல்வித்துறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் நிறுத்தி விடலாம் என்று முடிவு செய்து ஆசிரியர்களிடம் கூறினோம். அவர்கள் மாற்று ஏற்பாடு செய்வதாக கூறி அருகில் உள்ள ரேஷன் கட்டிட வராண்டாவில் குழந்தைகனை அமர வைத்து பாடம் நடத்தி வருகின்றனர். மழை, வெயில் காலங்களில் குழந்தைகள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் பள்ளி வகுப்பறைக்குள் விஷ பூச்சித்தொல்லையை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.

Next Story