இடபற்றாக்குறையால் தரையில் அமர்ந்து படிக்கும் மாணவர்கள்


இடபற்றாக்குறையால் தரையில் அமர்ந்து படிக்கும் மாணவர்கள்
x
தினத்தந்தி 16 Jun 2023 8:45 PM GMT (Updated: 16 Jun 2023 8:45 PM GMT)

பொள்ளாச்சி நகராட்சி நடுநிலைப்பள்ளியில் இடபற்றாக்குறையால் மாணவர்கள் தரையில் அமர்ந்து படிக்கும் நிலை உள்ளது. எனவே கூடுதல் வகுப்பறைகள் கட்ட பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

பொள்ளாச்சி நகராட்சி நடுநிலைப்பள்ளியில் இடபற்றாக்குறையால் மாணவர்கள் தரையில் அமர்ந்து படிக்கும் நிலை உள்ளது. எனவே கூடுதல் வகுப்பறைகள் கட்ட பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மாணவர் சேர்க்கை அதிகரிப்பு

பொள்ளாச்சி ஊத்துக்காடு ரோடு ராமகிருஷ்ணா நகரில் நகராட்சி நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு கொரோனா காலத்தில் ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டது. மேலும் தரமான கல்வியை அளிப்பதால் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது. இந்த கல்வி ஆண்டில் 780 மாணவர்கள் படித்து வருகின்றனர். அதில் புதிதாக 120 பேர் பள்ளியில் சேர்க்கப்பட்டு உள்ளனர். தொடர்ந்து மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது.

ஆனால் இடபற்றாக்குறை காரணமாக வகுப்பறையில் மாணவர்கள் தரையில் அமர்ந்து படிக்க வேண்டிய நிலை உள்ளது. மேலும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்களும் இல்லை. இதனால் அவர்களது கல்வி பாதிக்க வாய்ப்பு உள்ளது.

கூடுதல் வகுப்பறைகள்

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

ராமகிருஷ்ணா நகர் பள்ளியில் 50 பேர் அமர வேண்டிய வகுப்பறையில் 100 பேர் அமர்ந்து பாடம் படிக்கின்றனர். பெஞ்ச் இருந்தும், பயன்படுத்த முடியவில்லை. இதனால் மாணவர்கள் தரையில் அமர வேண்டிய உள்ளது. தற்போது கூடுதலாக 4 வகுப்பறைகள் கட்டப்பட்டு வருகிறது. ஆனால் அதுகூட போதுமானதாக இருக்காது.

கூடுதலாக 2 வகுப்பறைகள் தேவைப்படும். தற்போது ஒரு தலைமை ஆசிரியை உள்பட 13 பேர் மட்டும் பணியில் உள்ளனர். இன்னும் கூடுதலாக 5 ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story