கல்வி உபகரணங்களை வாங்க கடைகளில் குவிந்த மாணவர்கள்


கல்வி உபகரணங்களை வாங்க கடைகளில் குவிந்த மாணவர்கள்
x

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படுவதையொட்டி நெல்லையில் கல்வி உபகரணங்களை வாங்க கடைகளில் மாணவர்கள் குவிந்தனர்.

திருநெல்வேலி

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படுவதையொட்டி நெல்லையில் கல்வி உபகரணங்களை வாங்க கடைகளில் மாணவர்கள் குவிந்தனர்.

பள்ளிகள் இன்று மீண்டும் திறப்பு

கோடையில் கடும் வெயில் வாட்டி வதைத்ததால், கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் தேதி தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் அரசு அறிவிப்பின்படி இன்று (திங்கட்கிழமை) முதல் 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரையிலான பள்ளிக்கூடங்கள் மீண்டும் திறக்கப்படுகிறது.

இதையொட்டி பள்ளிகளில் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.

கல்வி உபகரணங்கள்

பள்ளிக்கூடம் மீண்டும் திறக்கப்படுவதையொட்டி, மாணவ-மாணவிகள் கடந்த சில நாட்களாக கல்வி உபகரணங்களை ஆர்வமுடன் வாங்கி வந்தனர். நேற்று பெரும்பாலான மாணவ-மாணவிகள் பெற்றோர்களுடன் கடை வீதிகளுக்கு சென்று பேனா, பென்சில், நோட்டு புத்தகம், தண்ணீர் பாட்டில், டிபன் பாக்ஸ், புத்தகப்பை போன்றவற்றை ஆர்வமுடன் வாங்கினர்.

இதனால் நெல்லை டவுன், சந்திப்பு, பாளையங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள எழுதுபொருட்கள் கடைகளில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. தையல் கடைகளில் சீருடை தைக்க கொடுத்திருந்தவர்களும் அவற்றை ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.

இன்று புத்தகங்கள் வழங்கல்

பள்ளிக்கூடம் திறக்கும் இன்றைய தினமே மாணவ-மாணவிகளுக்கு புத்தகங்கள் வழங்க கல்வித்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

1 முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு வருகிற 14-ந்தேதி (புதன்கிழமை) பள்ளிகள் திறக்கப்படுகிறது.


Next Story