ராணுவ போர் விமானங்களை பார்வையிட்ட மாணவர்கள்


ராணுவ போர் விமானங்களை பார்வையிட்ட மாணவர்கள்
x
தினத்தந்தி 22 Jan 2023 12:15 AM IST (Updated: 22 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சூலூரில் ராணுவ போர் விமானங்களை மாணவர்கள் பார்வையிட்டனர்

கோயம்புத்தூர்


இந்திய விமானப்படையின் ராணுவ திறன் பற்றி பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த "உங்கள் படைகளை அறிவோம்" என்ற பிரசாரத்தை மத்திய ராணுவத்துறை செயல்படுத்தி வருகிறது.

இதன் ஒரு பகுதியாக சூலூரில் உள்ள விமானப்படை பயிற்சி மையத்தில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் விமானங்களை பார்வையிட கடந்த 2 நாட்கள் அனுமதிக்கப்பட்டனர்.

இதில் கோவை மாவட்ட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள், தேசிய மாணவர் படையினர் கலந்துகொண்டு ராணுவ விமானங்களை பார்வையிட்டனர்.

மேலும் ராணுவ, போலீஸ் அதிகாரிகளின் குடும்பத்தினர்கள் தங்களது குழந்தைகளுடன் வந்து பார்வையிட்டனர்.

இதில், எல்.சி.ஏ. தேஜாஸ் போர்விமானம், ஏ.என்.32 போக்குவரத்து விமானம், எம்.ஐ. 17, வி5 மற்றும் ஏ.எல்.எச். நவீன ஹெலிகாப்டர்கள், பவர் ஹேண்ட் கிளைடர் விமானம் ஆகியவற்றை பார்வையிட்டனர்.

கிளைடர் விமானம் பறக்கவிடப்பட்டதையும் பார்வையிட்டனர். ராணுவ விமானங்களின் சாகச நிகழ்ச்சியும் நடைபெற்றது. ரேடார் கருவிகள் உள்ளிட்டவற்றையும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பார்வையிட்டு மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்த தகவலை சூலூர் விமானப்படை வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story