10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிந்து பிரியாவிடை பெற்ற மாணவர்கள்

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிந்து பிரியாவிடை பெற்ற மாணவர்கள்
x

நெல்லை மாவட்டத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தோ்வு நேற்று முடிந்தது. இதையடுத்து மாணவர்கள் பிரியாவிடை பெற்றுச் சென்றனர்.

திருநெல்வேலி

நெல்லை மாவட்டத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தோ்வு நேற்று முடிந்தது. இதையடுத்து மாணவர்கள் பிரியாவிடை பெற்றுச் சென்றனர்.

பொதுத்தேர்வு

கொரோனா ஊரடங்குக்கு பிறகு நடப்பு 2022-23-ம் கல்வி ஆண்டு முழுமையாக தொடங்கி செயல்பட்டு உள்ளது. இதையொட்டி இந்த ஆண்டு பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெற்றது. கடந்த மார்ச் மாதம் 13-ந்தேதி பிளஸ்-2 மாணவர்களுக்கான தேர்வு தொடங்கி கடந்த 3-ந்தேதி முடிவடைந்தது.

அதேபோல் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு இந்த மாதம் 6-ந் தேதி தமிழ்மொழி பாடத்துடன் தொடங்கியது. நெல்லை மாவட்டத்தில் இதற்காக 96 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. இந்த தேர்வு நேற்று முடிவடைந்தது. இந்த தேர்வை 22 ஆயிரத்து 868 மாணவர்கள் எழுதி உள்ளனர். 670 மாணவர்கள் தேர்வு எழுதவில்லை.

பிரியாவிடை

தேர்வு முடிந்த பின்னர் தேர்வு மையத்தில் இருந்து வெளியே வந்த மாணவர்கள் பிரியாவிடை பெற்றுச் சென்றனர். சிலர் தங்கள் நண்பர்களுக்கு பரிசுகள் வழங்கியும், பேனா மையை தெளித்தும் ஆனந்தமடைந்தனர்.

Next Story