தொலைநோக்கியில் நிலவின் மேற்பரப்பை பார்த்த மாணவ-மாணவிகள்


தொலைநோக்கியில் நிலவின் மேற்பரப்பை பார்த்த மாணவ-மாணவிகள்
x

தொலைநோக்கியில் நிலவின் மேற்பரப்பை பார்த்த மாணவ-மாணவிகள்

திருப்பூர்

தளி

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 21-ந் தேதி சர்வதேச நிலவு நோக்கும் இரவாக உலகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில் உடுமலை கலிலியோ அறிவியல் கழகம், அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா மற்றும் தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை, திருப்பூர் மாவட்ட அரசு மாதிரி பள்ளி சார்பில் உடுமலையில் நிலவு நோக்கு இரவு நடைபெற்றது.

நிகழ்வுக்கு தலைமை ஆசிரியர் கணேஸ்வரி தலைமை தாங்கினார். உடுமலை சுற்றுச்சூழல் சங்க தலைவர் மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். உடுமலை கலிலியோ அறிவியல் கழக ஒருங்கிணைப்பாளர் கண்ணபிரான், வானவியல், வானவியல் சார்ந்த படிப்பு, வானவியலில் ஆர்வம் உள்ளவர்கள் எவ்வாறு தங்களது மேல்படிப்பினை தேர்வு செய்தால் வருங்காலங்களில் இஸ்ரோ போன்ற நிறுவனங்களில் விஞ்ஞானிகளாக வர முடியும் என்பது பற்றி மாதிரி பள்ளி மாணவ மாணவிகளிடம் கலந்துரையாடினார்.

உடுமலை கலிலியோ அறிவியல் கழக உறுப்பினர்கள், ஆசிரியர் சதீஷ்குமார், கல்லூரி மாணவிகள் ஹரிணி, மதுஸ்ரீ ஆகியோர் தொலைநோக்கி வழியே சனிக்கோளினை வளையங்களுடனும், வியாழன் கோளையும், குறிப்பாக நிலவினை அதனுடைய மேடு பள்ளங்களுடன் தெளிவாக மாணவர்களுக்கு காண்பித்தனர். மாணவர்களின் பெற்றோர்களும் முதல்முறையாக தொலைநோக்கி வழியே நிலவை கண்டு ரசித்தனர். தமிழ்நாடு அஸ்ட்ரானமிக்கல் சயின்ஸ் சொசைட்டி சார்பாக திருப்பூர் கார்த்திகேயன் கலந்து கொண்டு தொலைநோக்கி பயன்படுத்தி கோள்களையும் நிலவினையும் மாணவர்களுக்கு காண்பித்தார்.



Next Story