ஸ்கேட்டிங், கால்பந்து போட்டியில் தங்கம், வெள்ளி பதக்கம் வென்ற மாணவ-மாணவிகள்


ஸ்கேட்டிங், கால்பந்து போட்டியில் தங்கம், வெள்ளி பதக்கம் வென்ற மாணவ-மாணவிகள்
x

ராமேசுவரம் கிரைஸ்ட் தி கிங் இன்டர்நேஷனல் பள்ளி மாணவ-மாணவிகள் ஸ்கேட்டிங், கால்பந்து போட்டியில் தங்கம், வெள்ளி பதக்கம் வென்றனர்.

ராமநாதபுரம்

ராமேசுவரம்,

ராமேசுவரம், மெய்யம்புளி பகுதியில் செயல்பட்டு வரும் கிரைஸ்ட் தி கிங் இன்டர்நேஷனல் சி.பி.எஸ்.இ. பள்ளியில் மதுரை சகோதயா ஸ்கூல்ஸ் காம்ப்ளக்ஸ் சோன்பைவ் ஸ்கேட்டிங் விளையாட்டு போட்டி நடைபெற்றது. இதில் ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய 3 மாவட்டங்களில் இருந்து 10 பள்ளிகளை சேர்ந்த 100 மாணவர்கள் பங்கேற்றனர். இதில் 300 மீட்டர், 500 மீட்டர், 1000 மீட்டர் என 3 பிரிவாக நடந்த ஸ்கேட்டிங் விளையாட்டு போட்டியில் ராமேசுவரம் கிரைஸ்ட் தி கிங் இன்டர்நேஷனல் சி.பி.எஸ்.இ. பள்ளியின் மாணவ-மாணவிகள் 11 தங்கப்பதக்கமும், 7 வெள்ளிப் பதக்கமும், 4 வெண்கல பதக்கமும் மொத்தம் 22 பதக்கங்களை வென்று சாதனை படைத்தனர்.

இதே போல் ராமநாதபுரத்தில் நடந்த 12 வயதுக்குட்பட்ட கூடைப்பந்து விளையாட்டு போட்டியிலும், கால்பந்து விளையாட்டு போட்டியிலும் ராமேசுவரம் கிரைஸ்ட் தி கிங் இன்டர்நேஷனல் சி.பி.எஸ்.இ பள்ளி 2-வது இடம் பிடித்து வெள்ளி பதக்கம் பெற்றது. ஸ்கேட்டிங் மற்றும் கூடைப்பந்து, கால்பந்து விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்த மாணவ-மாணவிகளை பள்ளியின் தாளாளர் பில்லிகிரஹாம், முதல்வர் ஷாலினிபில்லிகிரஹாம் மற்றும் அனைத்து ஆசிரியர்களும் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

1 More update

Related Tags :
Next Story