நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு கிடைக்கும் வரை மாணவர்களுக்கு பயிற்சி தொடரும்; அன்பில் மகேஷ்
அரசுப்பள்ளிகளில் தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் மூடப்படுகிறது என்பது பொய்ப்பிரச்சாரம். இவ்வாறு கூறினார்.
சென்னை,
சென்னை அண்ணா பல்கலையில் நடைபெற்ற தமிழ்நாடு அறக்கட்டளை ஆண்டு விழாவில் பங்கேற்ற அமைச்சர் அன்பில் மகேஷ் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறியதாவது ;
பள்ளி மாணவர்களிடையே போதைப்பொருள் புழக்கம் குறித்து கண்காணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.மாணவர்கள் போதைப்பொருள் பழக்கத்தில் இருந்து விடுபட சிற்பி திட்டம் பயனுள்ளதாக இருக்கும்.போதை பொருள் இல்லா வளாகங்களாக பள்ளிக்கூடங்கள் மாற வேண்டும்.
நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு கிடைக்கும் வரை மாணவர்களுக்கான பயிற்சி தொடரும். அரசுப்பள்ளிகளில் தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் மூடப்படுகிறது என்பது பொய்ப்பிரச்சாரம். இவ்வாறு கூறினார்.
Related Tags :
Next Story