காவிரி ஆற்றின் கரையில் படித்துறை கட்டும் பணியை முன்னாள் அமைச்சர் தங்கமணி ஆய்வு
பள்ளிபாளையத்தில் காவிரி ஆற்றின் கரையில் படித்துறை கட்டும் பணியை முன்னாள் அமைச்சர் தங்கமணி ஆய்வு செய்தார்.
நாமக்கல்
பள்ளிபாளையம்
பள்ளிபாளையம் முருகன் கோவில் அருகே காவிரி ஆற்றின் கரையில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.41 லட்சத்தில் படித்துறை கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை நேற்று சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான தங்கமணி நேரில் சென்று ஆய்வு செய்தார். தொடர்ந்து காவிரி ஆற்றின் கரையில் படித்துறை கட்டும் பணிகள் குறித்து கேட்டறிந்தார். அப்போது நகராட்சி அதிகாரிகள், முன்னாள் நகராட்சி தலைவர் வெள்ளியங்கிரி, முன்னாள் நகராட்சி துணை தலைவர் சுப்பிரமணியம் மற்றும் கவுன்சிலர்கள் சுஜாதா மாரிமுத்து, ஜெயா வைத்தி மற்றும் அ.தி.மு.க. கட்சியினர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story