காரைக்குடி பகுதியில் பழக்கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு
காரைக்குடி பகுதியில் பழக்கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
காரைக்குடி
காரைக்குடி பகுதியில் பழக்கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
அதிகாரிகள் ஆய்வு
சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி உத்தரவின்பேரில் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் டாக்டர் பிரபாவதி தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் முத்துக்குமார் (காரைக்குடி), தியாகராஜன் (சாக்கோட்டை), வேல்முருகன் (தேவகோட்டை) ஆகியோர் காரைக்குடி பகுதியில் உள்ள பழக்கடைகளில் திடீர் ஆய்வு செய்தனர்.
அப்போது சில கடைகளில் கெட்டுபோன நிலையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பழச்சாறு, கார்பைடு கல் வைத்து பழுக்க வைக்கப்பட்ட 305 கிலோ மாம்பழங்கள் மற்றும் அழுகிய நிலையில் இருந்த 57 கிலோ பழங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு உணவு பகுப்பாய்வு கூடத்திற்கு ஆய்விற்காக அனுப்பி வைக்கப்பட்டது.
55 பேருக்கு அபராதம்
மேலும் 55 பேருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு அபராதமும் விதிக்கப்பட்டது. இதுபோன்று மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சம்பந்தப்பட்ட கடை வியாபாரிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.