திருச்செங்கோட்டில் 369 பள்ளி, கல்லூரி வாகனங்கள் ஆய்வு


திருச்செங்கோட்டில் 369 பள்ளி, கல்லூரி வாகனங்கள் ஆய்வு
x
நாமக்கல்

திருச்செங்கோடு

தமிழக அரசு உத்தரவின்படி வருகிற ஜூன் 1-ந் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இதையொட்டி திருச்செங்கோடு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட பள்ளி வாகனங்களை, திருச்செங்கோடு கே.எஸ்.ஆர். கல்வி நிறுவன மைதானத்தில் உதவி கலெக்டர் கவுசல்யா ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது, வாகனங்களில் அவசர கால வழி, வாகனங்களின் படிக்கட்டுகள் சரியான உயரத்தில் அமைக்கப்பட்டு உள்ளதா?, படிக்கட்டு முன்பக்க கேமரா, பின்பக்க கேமரா, வாகனங்களில் உள்ளிருக்கும் கேமரா, அவை மானிட்டரில் தெரிகிறதா? பின்பக்கம் வாகனங்களை இயக்கும்போது சென்சார் இயங்குகிறதா? அது குறித்து அறிவிப்பு டிரைவருக்கு கிடைக்கிறதா? தீயணைப்பு கருவிகள் உள்ளதா?, தீயணைப்பு கருவிகள் ஓட்டுநர்களால் இயக்கப்பட முடியுமா? உரிய மருந்துகளுடன் கூடிய முதலுதவிப் பெட்டி என்பதுஉள்ளிட்ட 21 அம்சங்கள் உள்ளதா? என்றும் உதவி கலெக்டர் ஆய்வு செய்தார். இந்த ஆய்வில் முதல் நாளான நேற்று 369 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன. குறைகள் கண்டறியப்பட்ட 23 பள்ளி குறைகளை நிவர்ச்சி செய்து, மறு ஆய்வுக்குகொண்டுவர அறிவுறுத்தப்பட்டது.

வருகிற 31-ந் தேதி வரை இந்த வாகன சோதனை நடைபெற உள்ளது. இந்த ஆய்வின்போது வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சரவணன், வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் பாமப்பிரியா, திருச்செங்கோடு டவுன் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் அரசுத்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.


Next Story