ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கட்டிட சீரமைப்பு பணிகளை கலெக்டர் உமா ஆய்வு


ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கட்டிட சீரமைப்பு பணிகளை கலெக்டர் உமா ஆய்வு
x
நாமக்கல்

கலெக்டர் ஆய்வு

கொல்லிமலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடந்து வரும் வளர்ச்சி திட்ட பணிகள் மற்றும் முடிவுற்ற பணிகளை மாவட்ட கலெக்டர் உமா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் கொல்லிமலை அரசு ஆஸ்பத்திரியில் போதுமான மருந்துகள் கையிருப்பில் உள்ளதா? குடிநீர் மற்றும் கழிவறை வசதிகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா? என்பதை அவர் பார்வையிட்டார்.

பின்னர் ஆஸ்பத்திரியில் பராமரிக்கப்படும் புறநோயாளிகள் பதிவேடு, மருந்துகள் இருப்பு பதிவேடு ஆகியவற்றை கலெக்டர் ஆய்வு செய்தார்.

பொதுமக்கள் பயன்பாட்டுக்கு

அதேபோல் வாழவந்திநாடு கிராமத்தில் உள்ள கிளை நூலகம், அசக்காட்டுப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கட்டிடத்தில் சீரமைப்பு பணிகள், ஆலவடிப்பட்டி கிராமத்தில் ரூ.13 லட்சத்தில் அங்கன்வாடி மையம் அமைக்கும் பணி ஆகியவற்றை அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது ஒப்பந்த காலத்திற்குள் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கலெக்டர் உமா அறிவுறுத்தினார். இந்த ஆய்வுகளின்போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சரவணன், தனபால் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

1 More update

Next Story