மேல்மலையனூர் நரிக்குறவர் குடியிருப்பில் முதன்மை கல்வி அலுவலர் ஆய்வு


மேல்மலையனூர்  நரிக்குறவர் குடியிருப்பில் முதன்மை கல்வி அலுவலர் ஆய்வு
x

மேல்மலையனூர் நரிக்குறவர் குடியிருப்பில் முதன்மை கல்வி அலுவலர் ஆய்வு செய்தாா்.

விழுப்புரம்

மேல்மலையனூர்,

மேல்மலையனூர் நரிக்குறவர் குடியிருப்பில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியா பள்ளி செல்லா குழந்தைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் மாணவர்களிடம் அரசு, உ,?ங்களை முன்னேற்றுவதற்காக பல்வேறு திட்டங்களை கொண்டுவந்தள்ளது. அவற்றை நீங்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். பள்ளிக்கு தினமும் செல்ல வேண்டும். பெற்றோர்கள் நீங்கள் அவர்களுக்கு உறுதுணையாக இருந்து பள்ளிக்கு அனுப்ப வேண்டும். பெண் குழந்தைகளுக்கு கல்லூரி சென்றால் மாதத்திற்கு ரூ.ஆயிரம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பள்ளிக்கு செல்லாமல் வியாபாரம் செய்யச் செல்வதால் உங்களின் படிப்பு வீணாகிவிடுகிறது. ஆகையால் கண்டிப்பாக அனைவரும் பள்ளிக்கு சென்று வாழ்க்கையில் முன்னேற வேண்டும். உங்களை நானே பள்ளியில் சென்று சேர்க்கிறேன் என்று கூறினார்.

பின்னர் அங்குள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளியில் 3 மாணவர்களை 10-ம் வகுப்பிலும், 2 மாணவர்களை 9-ம் வகுப்பிலும் சேர்த்து அவர்களுக்கு நோட்டு-புத்தகங்களை வழங்கினார்.

அப்போது செஞ்சி மாவட்ட கல்வி அலுவலர் (பொறுப்பு) சுப்புராயன், பள்ளி துணை ஆய்வாளர் விநாயகமூர்த்தி, வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஜமுனா, வட்டார கல்வி அலுவலர்கள் வெங்கடேசன், பிரகாஷ், தலைமை ஆசிரியர்கள் பரந்தாமன், தணியரசு, உதவி தலைமை ஆசிரியர் திருமால், ஜே.ஆர்.சி. ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் மணி மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள், ஆசிரியர்கள் உடனிருந்தனர்.


Next Story