மேயர் சரவணன் ஆய்வு


மேயர் சரவணன் ஆய்வு
x

மேலப்பாளையத்தில் மேயர் சரவணன் ஆய்வு மேற்கொண்டார்.

திருநெல்வேலி

நெல்லை மேலப்பாளையம் மண்டலம் 52-வது வார்டு தாய்நகரில் அமைந்துள்ள விளையாட்டு பூங்காவை மாநகராட்சி மேயர் சரவணன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து அங்கு பூங்கா பராமரிப்பு பணி மற்றும் தூய்மை பணியை தொடங்கி வைத்தார். ரெட்டியார்பட்டி சாலையில் ரூ.95 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கழிவு நீரோடை கட்டுமான பணிகளை பார்வையிட்டு விரைவில் முடிக்க அறிவுறுத்தினார். அதேபோல் ராஜாநகர் 4-வது தெருவில் சாலைகளை பார்வையிட்டு மழைக்காலங்களில் அப்பகுதியில் மழைநீர் தேங்காத வகையில் சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் கூறினார்.

இந்த ஆய்வின்போது கவுன்சிலர்கள் நித்தியபாலையா, சுந்தர், உதவி ஆணையாளர் ஜஹாங்கீர்பாஷா, சுகாதார அலுவலர் அரசகுமார் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story