ஆலங்காயம் சுகாதார நிலையத்தில் ஆய்வு கூட்டம்


ஆலங்காயம் சுகாதார நிலையத்தில் ஆய்வு கூட்டம்
x

ஆலங்காயம் சமுதாய சுகாதார நிலையத்தில் மாதாந்திர ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

திருப்பத்தூர்

வாணியம்பாடி

ஆலங்காயம் சமுதாய சுகாதார நிலையத்தில் மாதாந்திர ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

ஆலங்காயம் சமுதாய சுகாதார நிலையத்தில் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ச.பசுபதி தலைமையில் மாதாந்திர ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் டாக்டர் டி.ஆர். செந்தில் கலந்துகொண்டு தாய்சேய் நல திட்டங்களை முறையாக செயல்படுத்தி மகப்பேறு இறப்புகள் ஏற்படாவண்ணம் பணிபுரிய வேண்டும் என அறிவுறுத்தினார்.

ஆய்வின் போது திருப்பத்தூர் மாவட்ட தாய்சேய் நல அலுவலர் பியூலா ஏஞ்சலின், மாவட்ட புள்ளியியலாளர் வேதராமன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.

கூட்டத்தில் ஆலங்காயம் வட்டாரத்திற்குட்பட்ட அனைத்து ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள், செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள், ஆய்வக நுட்பனர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.



Next Story