மனவளர்ச்சி குன்றியோர் பள்ளியில் குழந்தை நல அலுவலர் ஆய்வு


மனவளர்ச்சி குன்றியோர் பள்ளியில் குழந்தை நல அலுவலர் ஆய்வு
x
தினத்தந்தி 15 Oct 2023 12:15 AM IST (Updated: 15 Oct 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

வடலூர் மனவளர்ச்சி குன்றியோர் பள்ளியில் குழந்தை நல அலுவலர் ஆய்வு மேற்கொண்டார்.

கடலூர்

வடலூர்

வடலூர் ஆபத்தாரணபுரத்தில் மனவளர்ச்சி குன்றியோர் சிறப்பு பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 25 மாணவ-மாணவிகள் தங்கி உள்ளனர். இதில் ஒரு சிறுவனுக்கு உடல் முழுவதும் கொப்பளங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், இதே போல் மேலும் சிலர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சமூகவைலதளங்களில் வைரல் ஆனது.

இதையடுத்து கடலூர் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் அரவிந்த் தலைமையில், வடலூர் அரசு மருத்துவமனை டாக்டர்கள் கனிமொழி, பாலாஜி ஆகியோரை கொண்ட மருத்துவ குழுவினர் மனவளர்ச்சி குன்றியோர் பள்ளிக்கு வந்தனர். பின்னா் அவா்கள் அங்கு தங்கியுள்ள அனைத்து மாணவ- மாணவிகளையும் பரிசோதனை செய்தனர். இதில் ஒரு சிறுவனுக்கு மட்டும் உடலில் கொப்பளங்கள் இருந்ததை கண்டுபிடித்து அவனுக்கு சிகிச்சை அளிக்க பரிந்துரை செய்துள்ளனர்.


Next Story