ரூ.38 லட்சத்தில் துணை வேளாண்மை விரிவாக்க மைய விதை சேமிப்பு கிடங்கு


ரூ.38 லட்சத்தில் துணை வேளாண்மை விரிவாக்க மைய விதை சேமிப்பு கிடங்கு
x

பொறையாறில் ரூ.38 லட்சத்தில் துணை வேளாண்மை விரிவாக்க மைய விதை சேமிப்பு கிடங்கு கட்டுமானப் பணிக்கு நிவேதா முருகன் எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டினார்.

மயிலாடுதுறை

பொறையாறு:

மயிலாடுதுறை மாவட்டம் பொறையாறு அரண்மனை தெருவில் தமிழ்நாடு அரசு வேளாண்மை பொறியியல் துறை சார்பில் துணை வேளாண்மை விரிவாக்கம் மைய விதை சேமிப்பு கிடங்கு கட்டுமானப் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு வேளாண்மை பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். செம்பனார்கோவில் ஒன்றியக்குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர், தரங்கம்பாடி பேரூராட்சி மன்ற தலைவர் சுகுணசங்கரி குமரவேல், வேளாண்மை உதவி இயக்குனர் தாமஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒப்பந்ததாரர் பழனிவேல் வரவேற்றார். நிவேதா முருகன் எம்.எல்.ஏ. ரூ.38 லட்சம் செலவில் துணை வேளாண்மை விரிவாக்க மைய விதை சேமிப்பு கிடங்கு கட்டுவதற்கு அடிக்கல் நாட்டி, பணியை தொடங்கி வைத்தார். இதில் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் அப்துல்மாலிக், தஞ்சை மண்டல தி.மு.க. தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர், உதவி பொறியாளர் கீர்த்திவாசன், வேளாண்மை கிடங்கு மேலாளர் நாகராஜன், பேரூராட்சி மன்ற உறுப்பினர் ஜோன்ஸ் செல்லப்பா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story