வருவாய் கோட்டாட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்


வருவாய் கோட்டாட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்
x

வெட்டுவாணம் பகுதியில் நிலவும் இருதரப்பு மோதல்களை தடுக்க வருவாய் கோட்டாட்சியர் முன்னிலையில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஸ் கண்ணன் கூறினார்.

வேலூர்

அணைக்கட்டு

வெட்டுவாணம் பகுதியில் நிலவும் இருதரப்பு மோதல்களை தடுக்க வருவாய் கோட்டாட்சியர் முன்னிலையில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஸ் கண்ணன் கூறினார்.

போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா போலீஸ் நிலையத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது பல்வேறு குற்ற வழக்குகள் சம்பந்தப்பட்ட கோப்புகளை பார்வையிட்டார். மேலும் பள்ளிகொண்டாவை அடுத்த வெட்டுவாணம் பகுதிகளில் நிலவி வரும் இருதரப்பு மோதல் குறித்து கேட்டறிந்தார்.

அதற்கு இன்ஸ்பெக்டர் கருணாகரன் 12 வருடமாக இந்த பிரச்சினை நிலவி வருகிறது.

திருவிழாமற்றும் தேர்தல் நேரங்களில் பிரச்சினை விஸ்வரூபம் எடுக்கிறது என்று கூறினார். அதற்கு அந்தப் பகுதியில் உள்ள முக்கிய நபர்களை அழைத்து மோதல்கள் ஏற்படாதவாறு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கூறினார்.

வருவாய் கோட்டாட்சியர்

மேலும் பிரச்சினையில் தீர்வு ஏற்படவில்லை எனில் வருவாய் கோட்டாட்சியர் முன்னிலையில் அவர்களை ஆஜர் படுத்தி விசாரணை நடத்தி இரு தரப்பை சேர்ந்த 15-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குகள் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

இணையதளத்தில் நடக்கும் குற்ற சம்பவங்கள் குறித்து பள்ளி மாணவ- மாணவிகளிடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் ஆலோசனை வழங்கினார்.

பள்ளிகொண்டா சப்-இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.


Next Story