உழவர் சந்தை கட்டும் பணியை சப்-கலெக்டர் ஆய்வு


உழவர் சந்தை கட்டும் பணியை சப்-கலெக்டர் ஆய்வு
x

ஆனைமலை பகுதியில் உழவர் சந்தை கட்டும் பணியை சப்-கலெக்டர் ஆய்வு செய்தார்.

கோயம்புத்தூர்

ஆனைமலை

ஆனைமலை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பெற ரூ.1 கோடியில் உழவர் சந்தை மறுசீரமைப்பு பணி தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது. நடைபாதை மற்றும் மேடை அமைப்பதற்கு 2 மரங்கள் இடையூறாக உள்ளது, இதனை வெட்டி அகற்ற வேண்டும் என்று ஆனைமலை பேரூராட்சி சார்பாக தாசில்தாரிடம் மனு வழங்கப்பட்டது. மேலும் ரூ.20 லட்சம் செலவில் பஸ் டெர்மினல் கட்டும் பணியும் நடைபெற்று கொண்டிருக்கிறது.

இந்த பணிகளை பொள்ளாச்சி சப்-கலெக்டர் சுபம் ஞானதேவ் ராவ் நேற்று ஆய்வு செய்தார். அப்போது அவருடன் தாசில்தார் பானுமதி, வருவாய் ஆய்வாளர் கற்பகவள்ளி, ஆனைமலை முன்னாள் பேரூராட்சி தலைவர் சாந்தலிங்ககுமார் மற்றும் செயல் அலுவலர் உமாராணி, பேரூராட்சி அலுவலர்கள் இருந்தனர்.

------------------


Next Story